நடிகர் பார்த்திபன் முதலாவதாக டைரக்டர் கே.பாக்யராஜ் என்பவரிடம் துணை இயக்குனராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இதையடுத்து இவர் இயக்குனர், நடிகர் என 2 ட்ராக்கிலும் பயணித்து தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார். கடைசியாக பார்த்திபன் இரவின் நிழல் எனும் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். அதோடு நடிகராக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார் பார்த்திபன்.

இவரின் சொத்து மதிப்பு சுமார் 30 -40 கோடிகள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நடிகர் பார்த்திபன் வீடு சென்னை திருவான்மியூரில் உள்ளது. முன்னதாக பங்களா போன்ற வீட்டில் தான் அவர் இருந்தார். ஆனால் அதை ஒருக்கட்டத்தில் விற்கவேண்டிய நிலை வந்ததால் விற்றுவிட்டு விவாகரத்துக்கு பின் வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறார் நடிகர் பார்த்திபன்.