தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் உலகநாயகனாக வலம் வருபவர் தான் நடிகர் கமல்ஹாசன். தற்போது சினிமாவில் வரும் சில புது விஷயங்களை கமல் அப்போதே அவரது காலத்தில் செய்திருப்பார். அதை ஒரு உதாரணமாக எடுத்து படம் இயக்கும் கலைஞர்கள் பலர். கடந்த 2018 ஆம் வருடம் கமலின் விஸ்வரூபம் படம் வெளியாகியது. அதன்பின் கமல்ஹாசன் நடிப்பதை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, அரசியலில் ஈடுபடுவது என பிஸியாக இருந்தார்.

சில ஆண்டு இடைவேளைக்கு பின் 2022 ஆம் வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்தார் கமல். இந்த படம் கமல்ஹாசனுக்கு மிகப் பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை அடுத்து இந்தியன் 2ல் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே கமல்ஹாசனின் சொத்துமதிப்பு மட்டும் ரூபாய்.177 கோடி என்று சொல்லப்படுகிறது. இதேபோன்று அவருக்கு சென்னையில் உள்ள வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.19 கோடி வரை என கூறப்படுகிறது. விலை உயர்ந்த கார்கள் எனில் BMW 730Ld மற்றும் Deluxe Lenus Lx 570 இரண்டு கார்களையும் சேர்த்து ரூ. 3.69 கோடி இருக்கும்.