தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் சேர்ந்து மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட பிரிவிற்கு பின், படங்களில் நடிப்பதில் அதிக கவனத்தை செலுத்தி வந்தார். இதன்பின் நடிகை சமந்தா திடீரென மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார்.

மேலும் அவர் தென் கொரியாவுக்கு மேல் சிகிச்சைக்காக செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில், வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே  போராடிக் கொண்டிருக்கிறேன் என்றும் இருந்தாலும் மனம் தளரமாட்டேன் என்றும் உணர்ச்சி வசமாக பேசிய பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் புல்-அப்ஸ் வொர்க்-அவுட் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த வீடியோவில் சமந்தா உடல் மெலிந்து மிகவும் ஸ்லிம்மாக காட்சி அளிக்கிறார்.

இதனையடுத்து ‘நான் இப்போது ஆட்டோ இம்யூன் டயட்டில் இருக்கின்றேன் என்றும் அந்த வீடியோவிற்கான கேப்சனில் குறிப்பிட்டிருந்தார். இந்த டயட் எனக்குக் கற்றுக் கொடுத்தது என்னவென்றால் வலிமை என்பது நீங்கள் சாப்பிடுவதில் அல்ல,  எப்படி நினைக்கிறீர்கள் என்பதுதான்’ என பதிவிட்டிருந்தது, ரசிகர்கள் மத்தியில்  மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா குணமாகி விட்டாரா என்று உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது.