நடப்பு ஆண்டின் IPL சீசன் நேற்று பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. தொடக்க விழாவில் பல்வேறு முக்கிய நடிகர் நடிகைகள் நடனமாடினர். இதில் நடிகை ராஷ்மிகாவும் ஒருவர்.

மேலும் விழா முடிந்தபின் வாரிசு படத்தின் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா. அங்கு ஆட முடியாமல் போனதால் இந்த வீடியோ வெளியிடுகிறேன் என தெரிவித்திருக்கிறார். கேட்ட அனைவருக்கும் ஒரு சின்ன கிப்ட் இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.