தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் நானி. இப்போது இவர் நடிப்பில் தசரா திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸானது. இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கீர்த்தி சுரேஷ், சாய் குமார் உட்பட பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

தற்போது தசரா திரைப்படத்தின் வசூல் விபரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த படம் உலக முழுவதும் ரூ.38.40 கோடி வசூல் செய்துள்ளதாம். எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து வரவில்லை. அதே நாளில் வெளியானது சிம்புவின் பத்து தல படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் ரூ.12.3 கோடி என்று சொல்லப்படுகிறது.