நடிகர், நடிகைகளின் டுவிட்டர் பக்கங்களை மர்ம நபர்கள் ஹேக் செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் டுவிட்டர் கணக்கை முடக்கினர். இதையடுத்து டைரக்டர் விக்னேஷ் சிவனின் டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது. இந்நிலையில் தன் Twitter கணக்கை விக்னேஷ் சிவன் மீட்டெடுத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் டுவிட்டர் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. உண்மையை சொன்னால் சென்ற வாரம் மிகவும் அமைதியாக இருந்தது. என் Twitter கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு நன்றி. அப்ப..அப்ப.. இப்படி பண்ணுங்க ” என தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டு உள்ளார்.