தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்டம் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. இதையடுத்து கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, கொடைக்கானல், ஆடுபுலி, வித்தகன், வேலூர் மாவட்டம், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி திரைப்படத்திலும் பூர்ணா நடித்திருந்தார். மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்தார்.

கேரளாவை சேர்ந்தவரான பூர்ணா சென்ற ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின் பூர்ணா கர்ப்பமான நிலையில், அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார். சென்ற மாதம் நடைபெற்ற வளைகாப்பு புகைப்படங்களையும் வெளியிட்டார். இந்நிலையில் பூர்ணாவுக்கு இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது குழந்தையை பூர்ணா கையில் ஏந்தியபடி மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.