நடிகை கீர்த்தி சுரேஷ் தென் இந்திய திரைஉலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் பல டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தசரா திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதனிடையே கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்துகொண்டே இருக்கிறது. அவர் தொழில் அதிபரை திருமணம் செய்ய இருக்கிறார் என முன்பு தகவல் வெளியானது.

எனினும் கீர்த்தி சுரேஷ் அதுபற்றி வாய்திறக்கவில்லை. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் பெற்றோர் பேட்டி ஒன்றில் கூறியதாவது “சினிமா துறையில் இருந்தால் இப்படி செய்திகள் வரத்தான் செய்யும். அதேநேரம் கீர்த்தி சுரேஷ் யாரையாவது காதல் செய்தால் தங்களிடம் வந்து கூறுவார். அப்போது நாங்கள் அறிவிக்கிறோம். அவராக சொல்லாதவரை நாங்கள் அதுபற்றி கேட்க மாட்டோம்” என்று சொல்லி இருக்கின்றனர்.