கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்கள் குரல் எனும் பெயரில் பொதுக் கூட்டம் மற்றும் பேருந்து யாத்திரை நடந்து வருகிறது. இதற்கிடையில் பிரியங்கா காந்தி பெங்களூருவுக்கு வருகை புரிந்ததால் பேருந்து யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பேருந்து யாத்திரை நேற்று விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நேற்று மீண்டுமாக துவங்கியது.

ஒசப்பேட்டேயில் நடந்த மக்கள் குரல் பொதுக்கூட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பேசியிருப்பதாவது “மக்கள் குரல் என்றால் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் குரல் இல்லை. கர்நாடகத்தில் நடைபெறும் பா.ஜனதா ஆட்சியில் ஊழலை தவிர்த்து வேறு எதுவும் நடைபெறவில்லை. அதோடு நாட்டில் இது போன்ற ஊழல், முறைகேடுகள் நடைபெற்று வருவது பசவராஜ்பொம்மை தலைமையிலான ஆட்சியில் தான். மேலும் 40% கமிஷன் பெறப்படுவது வேறு எங்கும் இல்லை” என்று பேசினார்.