கன்னட சினிமாவில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலக பயணம் தெலுங்கு, தமிழ், மலையாளம் என பாலிவுட் வரை சென்றுள்ளது. பாலிவுட்டில் அமிதாப் பச்சனுடன் “good bye”, தமிழில் விஜய்யுடன் “வாரிசு” ஆகிய படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தற்போது ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் நடித்த “Mission Majnu” திரைப்படம் கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியாகி உள்ளது. இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனா பற்றிய பல வதந்திகளும், விமர்சனங்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், உடல் எடையை குறைத்தால் பையன் போல இருப்பதாக சொல்கிறீர்கள். எடையை அதிகரித்தால் பர்மன் என்கிறீர்கள். நான் என்னதான் செய்ய வேண்டும்?. சினிமாவை விட்டு போய்விட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?. உங்கள் வார்த்தைகள் என்னை மனதளவில் பாதிக்கிறது” என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோபத்துடன் பேசினார்.