
தமிழ் சினிமாவில் முகமூடி எனும் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமாகிய பூஜா ஹெக்டே, பின் பீஸ்ட் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பூஜா ஹெக்டே பேட்டி ஒன்று அளித்தார். அதில் “வாழ்க்கையில் எதுவுமே நம்முடைய கையில் இல்லை. நாம் செய்யக்கூடிய வேலைகளுக்கு எந்தமாதிரி பலன் வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முன்பே நான் நடித்த சில படங்கள் நன்றாக போகவில்லையே என கேட்கிறார்கள். எதுவாக இருந்தாலும் தவறு நடந்தால் அதற்குரிய காரணங்களை முழுமையாக ஆராய்ந்து திருத்திக்கொள்வேன். சில சமயங்களில் நாம் எதிர்பார்த்த பலன் வராமல் போகலாம். அதற்காக நாம் எடுத்த முடிவு தவறென நினைக்கக் கூடாது. நாம் எடுத்த முடிவின் காரணமாக ஏதோ ஒரு நாள் நம் வாழ்க்கை முழுமையாக மாறி நல்லது நடக்கும். அந்த நம்பிக்கையோடு தான் நான் முன்னேறுகிறேன்” என்று கூறியுள்ளார்.