
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதற்காக பல மாவட்டங்களிலிருந்து தி.மு.க தொண்டர்கள் சென்னை வந்து உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதமர், ஆளுநர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் மு.க.ஸ்டாலின் தொண்டரான கமலக் கண்ணன் செய்திருக்கும் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திறனாளியான கமலக் கண்ணன் டீக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் இன்று தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு டீ மற்றும் பிஸ்கட்டுகளை இலவசமாக வாரி வழங்கி வருகிறார். பொது மக்கள் பலரும் வரிசையில் நின்று அதை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். அதோடு பள்ளிக்கு போகும் மாணவர்கள், வயதானவர்கள் என பலரும் இலவசமாக வழங்கப்படும் ஸ்நாக்ஸ்களை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.