கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பின்னூர் பகுதியில் வைத்து சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உலிபுரம் புங்கமரத்துக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மாமனார் நாகியம்பட்டி ஆண்டிகுட்டாவைச் சேர்ந்த மருது  என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கூலித்தொழிலாளியான சரவணன், தனது மனைவி தனலட்சுமி மீது சந்தேகம் கொண்டு,  சமீபத்தில் மது போதையில் தகராறு செய்து சண்டையிட்ட நிலையில், தனலட்சுமி தனது பெற்றோர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.

அவளை திரும்ப அழைத்துச் செல்ல, சரவணன் பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது, அவரது மாமனார்  மருதை எதிர்கொள்ள, தனது மகளை அனுப்ப அவர் மறுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, இருவர் இடையே சண்டை முற்ற, சரவணனை அருகிலிருந்த கம்பை எடுத்து விரட்டியுள்ளார் மருது. 

இதையடுத்து நாகியம்பட்டி அய்யப்பன் கோவில் அருகே உள்ள ஆலமரத்தடியில் மருது  இறந்து கிடந்ததை அப்பகுதி மக்கள் கண்டு காவல் நிலையத்தில் தகவல்  தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் மருது  கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியா வந்தது.

பின் மேற்கொண்ட விசாரணையில் இதற்கு முன் நடந்த தகராறு காரணமாக  சரவணன் தனது மாமனார் மருதை கொலை செய்து விட்டு கேரளா மாநிலம் , எர்ணாகுளம் பகுதிக்கு சென்று தலைமறைவாக, அவர் அதிகாரிகளால்  கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.  பின் விசாரணையில், செய்த கொலையை சரவணன் ஒப்புக்கொள்ள அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.