டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவத்தில், 35 வயது கூலித்தொழிலாளி தனது சகோதரரின் 4 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். அந்த நபர், குடிபோதைக்கு அடிமையாகி, தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவாராம். இந்த தகராறுகளுக்குப் பிறகு, அவரது மனைவி தனது மாமனாரின் வீட்டிற்குச் சென்று விட்டார். செப்டம்பர் 22 அன்று, அந்த நபர் தனது மனைவியை திரும்ப அழைக்க சகோதரரின் வீட்டிற்குச் சென்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, தனது சகோதரரின் 4 வயது மகளை கடத்துவதாக மிரட்டினார்.

குடும்பத்தினர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, அவர்களைச் சந்தேகம் கொண்ட குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குற்றவாளியை திங்கள்கிழமை கைது செய்தனர், பின்னர் விசாரணையில் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது வெளிவந்தது.

இதன் பிறகு, அவர் சிறுமியின் உடலை நரேலா பகுதியில் உள்ள காட்டிற்குள் வீசினார். இதனை அறிந்த போலீசார் சிறுமியை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் சுற்றியுள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.