ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பருக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஜம்மு காஷ்மீரின் நிலைமை தற்போது மேம்பட்டுள்ளது. தற்போது தீவிரவாதம் சற்று குறைந்துள்ள நிலையில் முழுமையாக மறைந்து விடவில்லை என்பதை காவல்துறையே ஒப்புக் கொண்டுள்ளது. எல்லாம் சரியான முறையில் இருந்த போதிலும் இங்கு ஏன் தேர்தலை நடத்த தாமதப்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. அதன் பிறகு NCERT பாட புத்தகங்களில் இருந்து முகலாய வரலாற்றை நீக்குவது கவலை அளிக்கிறது.

முகலாய வம்சத்தின் தாக்கத்தினை அரசாங்கம் எப்படி மறக்க முடியும். அவர்களால் புத்தகத்திலிருந்து வார்த்தைகளை மட்டும் தான் அழிக்க முடியும். ஆனால் வரலாற்றை ஒருபோதும் அளிக்க முடியாது. முகலாய வம்சத்தினர் 800 வருடங்களாக இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் மண்ணை ஆண்டனர். தாஜ்மஹாலை உடைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஷாஜகான் மற்றும் அக்பரை மறக்க முடியுமா.? செங்கோட்டையை எப்படி மறைப்பீர்கள்.? மத்திய அரசு தன் காலில் தானே சுட்டுக் கொள்கிறது என்று விமர்சித்தார்.