ஐபிஎல் தொடரின் 29-வது லீக் ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பை அணி 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்து 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் கடைசி ஓவரில் களம் இறங்கிய தோனி ஹாட்ரிக் சிக்சர் வீசினார். இந்த சிக்சர் தங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்ததாக சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கூறியிருந்தார். இந்நிலையில் தோனி ஹாட்ரிக் சிக்சர் அடிக்கும் போது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.