
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள பகுதியில் 15 வயதான சிறுவன் ஒருவன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள முஸ்கான் அஸ்கரலி என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. இவரது காதல் விவகாரம் சிறுவனின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். தனது காதலுக்கு அந்த குழந்தை தான் தடையாக இருப்பதாக உணர்த்த சிறுவன் அந்த குழந்தையை அவர் கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 13ம் தேதி தனது காதலி வெளியே சென்று இருக்கும் போது பச்சிளம் குழந்தையை தலையில் அடைத்து அச்சிறுவன் கொலை செய்துள்ளார்.
அதன் பின் வீடு திரும்பிய தனது காதலியிடம் குழந்தை தவறி கீழே விழுந்ததாக கூறியுள்ளார். குழந்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுவன் ஊரை விட்டு சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண் தனது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதன்படி குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் குழந்தையின் தலையில் பலமாக தாக்கப்பட்ட காயங்கள் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சிறுவனை தேடி வந்தனர். உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாப்ராஜில் அச்சிறுவனை கைது செய்தனர் இதை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்