உத்தரப்பிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் புஷ்பா தேவி என்பவர் பிரசவத்திற்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து புஷ்பா தேவிக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பா தேவி தனது குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை நான் உணர்ந்தேன். மருத்துவர்கள் கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறி அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது புகார் அளித்த நிலையில், 

வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விசாரணையில் ஈடுபட, குழந்தை இறந்து விட்டதாக தாயிடம் பொய் கூறி அப்பகுதி கவுன்சிலர் ஒருவருக்கு  குழந்தையை அங்குள்ள மருத்துவர்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ரகுமான் மற்றும் அவருடன் தவறுக்கு துணை புரிந்த மற்றொரு மருத்துவர் என இருவரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும்  இது குறித்து விரிவான விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.