மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது இரண்டு சக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது. இந்த இரண்டு சக்கர வாகனத்தை பல இடங்களில் தேடிய கார்த்திகேயன் கண்டுபிடிக்க முடியாததால் போஸ்டர் ஒன்றை அடித்துள்ளார்.

அந்த போஸ்டரில் காணாமல் போன தனது பைக்கை கண்டுபிடித்து தருபவருக்கு ரூபாய் 10000 சன்மானம் கொடுப்பதாக அறிவித்துள்ளார். 2002 ஆம் வருடம் அவருடைய தாய் கொஞ்சம் கொஞ்சமாக சீட்டு பணம் கட்டி வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் இந்த பைக்கில் தற்போதைய விலை 5000 ரூபாய் தான் இருக்கும். ஆனால் இந்த பைக்கை கண்டுபிடித்தால் 10000 சன்மானம் அறிவித்ததற்கு காரணம் இந்த பைக்கை கார்த்திகேயன் தனது தாயின் நினைவாக வைத்துள்ளார்.

மேலும் பைக்கை  ஒப்படைப்பவருக்கு தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை எடுத்து தருவதாகவும் கூறியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்  இவருடைய தாய் இறந்து விட்டார்..  தாயின் மீது கொண்ட அளவிட முடியாத அன்பை  இவருடைய இந்த அறிவிப்பின் மூலம் உணரமுடிகிறது. கார்த்திகேயனின் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.