கோவில் வாசலில் பூ விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தும் பெண் ஒருவரது மகன் தனக்கு iphone வாங்கி தர வேண்டும் என கேட்டு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுத்ததால் அவரது மகன் மூன்று நாட்களாக சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ளார்.

இதனால் கவலை அடைந்த அந்தப் பெண் கடுமையாக உழைத்து பூ விற்ற பணத்தில் தனது மகனுக்கு iphone வாங்கி கொடுத்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.

அந்த காணொளியில் “இவ்வளவு விலை மதிப்பான”  போனை  கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த.. என்னன்னு சொல்ல” 3 நாள் சாப்பிடல ; வேற வழியும் எனக்கு தெரியல… ! என்று அந்த பெண் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

அதோடு தனது மகனுக்கு போன் வாங்கி கொடுத்தது மகிழ்ச்சி தான்..!  என்றும் ஒரு நாள் தனது மகன் தனக்கு சம்பாதித்து தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த காணொளியை பார்த்த பயனர்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிலர் அடம் பிடித்த மகனை திட்டியும் சிலர் தாயின் செயலை பாராட்டியும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.