
கேரள மாநிலத்தில் மழைக்காலம் என்பதால் தொடர்ந்து மழை பெய்தவாறு உள்ளது. வெகுவாக மழைக்கால தொற்று நோய்கள் பரவி வருகின்றன. கேரளா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகப்படியாக பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகமானோருக்கு சளி தொல்லை மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாத தொடக்கத்தில் 328 பேர் மட்டுமே சளி, காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் நேற்று மட்டுமே 2870 பேர் இந்த சளி மற்றும் காய்ச்சல் தொல்லையால் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதாரத் துறைக்கே மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வகையான பருவநிலை தொற்று சிறியவர்களில் இருந்து பெரியவர்களுக்கும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் பரவலாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, முதுகு வலி, வயிற்று வலி, உடல் சோர்வு ஆகிய அறிகுறிகள் உடலில் தோன்றினால் சாதாரணமாக கருதாமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறினர்.