விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் குரங்குகள் சுற்றி திரிகிறது. இந்த குரங்குகள் வீட்டின் மாடியில் உலர வைத்திருக்கும் சமையல் பொருட்கள், துணிகளை சேதப்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் குரங்குகள் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால் சிறு, சிறு விபத்துக்கள் நடக்கிறது. எனவே இடையூறு செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.