
சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த ஒருவரது செல்போன் எண்ணுக்கு தகவல் வந்தது. அதில் நான் லண்டனில் வசிக்கிறேன் சென்னைக்கு வர உங்கள் உதவி தேவைப்படுகிறது. மேலும் சென்னைக்கு வரும் முன்பு உங்களுக்கு பரிசு பொருட்கள் அனுப்ப விரும்புகிறேன். அதற்கான சுங்க கட்டணம் உள்ளிட்ட செலவு தொகையாக 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பி அந்த நபர் ஆன்லைன் மூலம் 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவருக்கு எந்த பரிசு பொருளும் வரவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நபர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதாவது மணிப்பூரைச் சேர்ந்த தபீதா (32), அவரது கணவர் துரு கிளின்டன்(27) நண்பர் பிரான்சிஸ்கோ(40) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டனர். இதில் துரு கிளிண்டனும், பிரான்சிஸ்கோவும் நைஜீரியாவை சேர்ந்தவர்கள். மூன்று பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.