சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டி பகுதியில் சகுந்தலா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதில் வங்கியில் கடன் பெற தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிலிருந்த எண்ணை சகுந்தலா தேவி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மறு முனையில் பேசிய நபர்கள் இரண்டு லட்ச ரூபாய் கடன் தருகிறோம் என கூறியுள்ளனர்.

எனவே ஆவணங்களுக்கு பணம் கட்ட வேண்டும் என பல்வேறு காரணங்களை கூறி அவர்கள் சகுந்தலாதேவியிடம் இருந்து இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை வழங்கியுள்ளனர். ஆனால் கடன் கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சகுந்தலா தேவி சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்