திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவருமான, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, சின்ன சின்ன விஷயங்கள் சொல்லி உள்ளார்கள்.  கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது,  அதை உடனடியாக செய்ய வேண்டும். அதில் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்பதை குழு  பரிந்துரை செய்து,  செய்ய சொல்லி இருக்கின்றோம்.

சாலையில் மேம்பாட்டு பணிகள்… பொது பணித்துறை தாமிரபரணி ஆறினுடைய விரிவாக்கங்கள், இது போன்ற பல நூறு கோடி ரூபாயில் ஆன திட்டங்கள் தான் 20 ஆண்டுகாலம்… 25  ஆண்டு காலம் நிலுவையில் இருந்தது.  அதையெல்லாம் முழு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு விளக்கம் கோரிய போது பொதுப்பணித்துறை சில வழக்குகளின் காரணமாக நிலவையில் இருக்கிறது.

அதேபோன்று நம்முடைய பாதாள சாக்கடை திட்டமும் ஒரு வழக்கின் காரணமாக காலதாமதம் ஆகியது. அதேபோல பேருந்து நிலையம் நிலையம் சிபிசிஐடியின் விசாரணையின் காரணமாக காலதாமதம் ஆகியது. அதற்கு நம்முடைய ஆணையரே வழக்கு தொடுத்து, இன்றைக்கு அது முடித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்று இந்த குழு ஆய்வு செய்ததன் ஊடாக  மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் இன்று பல்வேறு துறை  அதிகாரிகள் தங்கள் துறையில் எவ்வாறு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ?

இந்த உறுதிமொழி நிறைவேற்றுவதற்காக என்ன நடவடிக்கையில் அவர்கள் செய்திருக்கிறார் என்பதை கேட்டறிந்து, அவர்களுக்கு அவ்வப்போது சில அறிவுரைகளையும்,  ஆலோசனைகளையும் குழு  பரிந்துரை செய்திருக்கிறது. மாநில அளவில் துறை செயலாளர், துறை தலைவர் அளவில் முடிவெடுக்கக்கூடிய இடங்களிலேயே அந்த மாநில துறை  செயலாளர்கள், தலைவர்கள் குழுமுன் ஆஜராகின்ற  போது இதையும் நாங்கள் மாநிலப்பட்டியலுக்கு மாற்றி.. முண்ணுரிமை அடிப்படையில் விரைவாக அந்த பணிகளை செய்வதற்கு குழு பரிந்துரை செய்கிறது என தெரிவித்தார்.