
மெக்சிகோவில் 73 ஆவது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்டத்தை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் கைப்பற்றினார். அவர் விக்டோரியா கிஜேர் (21) ஆவார். இவர் தான் டென்மார்க்கில் அழகி பட்டத்தை பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் என்பவர் விக்டோரியாவுக்கு மகுடம் சூட்டினார்.
இந்த போட்டியில் முதல் ரன்னரப்பாக மெக்சிகோவின் மரியா பெர்னாண்டா பெல்ட்ரான் என்பவரும், 2-வது ரன்னர் அப்பாக நைஜீரியாவின் சினிடிம்மா அடெட்ஷினா என்பவரும் பிடித்தனர். மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்ற ரியா சிங்கா (19), இந்தியா சார்பில் பிரபஞ்ச அழகி போட்டியிலும் கலந்து கொண்டார். இவர் ஆரம்பத்தில் அசத்தினாலும் முதல் 12 இடங்களை பிடிக்காததால் இறுதி சுற்றிருக்கு முன்னேற முடியவில்லை. இந்த போட்டியில் முதல் 12 இடங்களைப் பிடித்த 12 பேரில் 7 பேர் லத்தின அமெரிக்காவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.