
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் செய்தியாளரிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்னைக்கு ஆளுநரை நாம் சந்தித்தது எதற்காக அப்படின்னா..? அதுல முதல் விஷயம். நமது காவேரியில் தமிழகத்திற்கு வேண்டிய உரிமையை பெற்று தருவதற்கு மத்திய அரசு உடனடியாக செவி சாய்த்து, நமது விவசாய பெருமக்களுக்கு வேண்டிய உரிமையை தர வேண்டும் என்று நான் கேட்டு இருக்கேன்.
ஏனென்றால் இது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கு. ஒவ்வொரு வருடமும் நாம கர்நாடகாவை எதிர்நோக்கி உட்கார்ந்து இருக்கின்ற நிலைமை இருக்கின்றது. இது நிரந்தரமாக தீர்வு பெற வேண்டும் என்றால் ? நதிகள் இணைப்பு ஒன்றுதான் சாத்தியம். அதற்கு உடனடியாக மத்திய – மாநில அரசுகள் செவி சாய்த்து, அத்தனை தேசிய நதிகளை இணைக்கனும்னு நாங்க வேண்டுகோள் விடுத்திருக்கின்றோம்.
அது மட்டும் கிடையாது காவேரியில் இந்த முறை நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை… நமது உரிமையை கர்நாடக அரசு விட்டுத்தரனும்… ஏனென்றால் அவர்கள் அதிகப்படியான தண்ணி வச்சிருக்காங்க. அவங்க நமக்கு கொடுக்க மறுக்கிறாங்க. கர்நாடக முழுக்க தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக முதல்வருக்கு எதிராகவும் அவர்கள் செய்கின்ற விஷயங்கள் நிச்சயமாக கண்டனத்திற்கு உரியது.
ஆனால் நமது நீர்வளத்துறை அமைச்சர் டெல்லிக்கு போறாரு.. வராரு.. ஆனால் எந்த விஷயமும் இங்கு முடிந்த பாடாக கிடையாது. சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவோம்ன்னு அவர் சொல்றாரு… இதுவே முதல் கண்டனத்திற்குரியது. அதேபோல எப்போ இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் ? தமிழர்களை எல்லாம் கர்நாடகாவில் அடிக்கிறாங்களே அப்படின்னு துரைமுருகன் கிட்ட கேட்டா… அதுக்கு நான் என்னப்பா பண்றதுன்னு சொல்லி, நகைச்சுவையா பேசுறாரு. இது நகைச்சுவையாக பேசக்கூடிய விஷயம் கிடையாது. வெரி வெரி சென்சிட்டி இஸ்யூ.
ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு கர்நாடகாவிடம் எதற்காக கையேந்தி நிற்கணும் ? நமக்கு தரவேண்டிய உரிமையை நிச்சயமாக மத்திய – மாநில அரசுகள் செய்ய வேண்டிய ஒரு விஷயம். எனவே காவேரியில் தண்ணீரைப் பெற்று, தமிழக முழுவதும் இருக்கின்ற விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது இந்த அரசின் கடமை. இதை நாங்கள் முதல் கோரிக்கையாக வலியுறுத்தி இருக்கிறோம் என தெரிவித்தார்.