தமிழகத்தின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக தொடர்ச்சியாக ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அண்ணாமலை தமிழகத்தின் ஆளும் அரசின் நிதி அமைச்சர் பேசியதாக முதலில் ஒரு ஆடியோ வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆடியோவை நான் வெளியிட்டேன். இந்த ஆடியோ பொய் என்று கூறி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழக்கு தொடரட்டும். அப்போது அவர் பேசிய உண்மையான ஆடியோக்கள் மற்றும் யாருடன் பேசினார் என்ற விவரங்களை தருகிறோம். நாங்கள் வெளியிட்ட டிஎம்கே பைல்ஸுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைச்சர் பீடிஆர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று கூறினார்.