தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கான மேம்பட்ட பயிற்சி திட்டத்தை  தொடஙகி வைத்தார். இந்த நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா. சுப்ரமணியம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஜேஇஇ நுழைவு தேர்வுக்கான மேம்பட்ட பயிற்சியை பெற இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடி போன்ற கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். மேலும் ஜேஇஇ நுழைவு தேர்வை எழுத இருக்கும் 274 மாணவர்களுக்கு சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூலம் இந்த வருடம் 45 நாட்கள் பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது என்றும் கூறினார்.