இந்திய விமானப் படையின் MiG-21 போர் விமானமானது தொடர்ந்து விபத்துகளில் சிக்கிவரும் சூழலில், இந்திய விமானப்படை அதற்கு தடைவிதித்துள்ளது. MiG-21 ரக விமானங்கள் இராணுவத்தில் முற்றிலும் வெளியேறுவதற்குரிய வழியை விமானப்படை காட்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்ற சில வாரங்களுக்கு முன் ராஜஸ்தானில் MiG-21 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு முன்பாகவும் இது போன்ற பல்வேறு விபத்துகளில் விமானிகள் உயிரிழந்து உள்ளனர். இவ்விபத்துகள் காரணமாக விமானப் படை இந்த விமானத்தை தற்காலிகமாக தடைசெய்துள்ளது.