அரியலூர் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் பகுதியில் கேர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் இருக்கும் முருகன் கோவில் பின்புறம் நின்ற ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அவர் அஸ்தினாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கல்வி(54) என்பது தெரியவந்தது. இவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் கல்வியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.