தமிழர்களின் முக்கிய பெரும் பண்டிகையான பொங்கல் நாளை(ஜன,.15) முதல் 4 நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட இருக்கிறது. புது ஆண்டு பிறந்ததிலிருந்து பொங்கல் பண்டிகைக்குரிய கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. பொங்கல் பண்டிகை என சொல்வதைவிட திருவிழா என்றே கூறலாம். இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை பரவலாக கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில் தான் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் என்றாலே கிராமத்தில் கொண்டாடப்படுவது தான் வெகு விமர்சியாக இருக்கும். இந்த பண்டிகைக்காக வெளிநாட்டினர் முதல் உள்ளூர் நகரகாரர்கள் வரை அனைவரும் கிராமத்துக்கு படையெடுப்பர்.  எந்த ஊரில் இருந்தாலும், தனது சொந்த கிராமத்திற்கு வந்து அனைவரும் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர்.

நாளை (ஜனவரி-15) தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. நாளை காலை 7:45 முதல் 8:45 வரை பொங்கல் வைக்க உகந்த நேரம் என கூறப்படுகிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள், காலையில் பொங்கல் வைக்க இயலாதவர்கள் பகல் 1:30 முதல் 2.30 வரையிலும், மாலை 3:30 முதல் 4:30 வரையிலும் பொங்கல் வைக்கலாம். அதேபோல் மாட்டுப் பொங்கல் அன்று காலை 6:30 முதல் 7:30 வரை பொங்கல் வைக்க நல்ல நேரமாகும்.