இத்தாலியின் தலைநகரான ரோம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரோமில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இன்று அதிகாலை நேரத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை பெட்ரோல் நிலையத்திலிருந்த ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் எரிவாயு கசிவை நிறுத்தும் முயற்சியில் இறங்கினர்.

அவர்கள் பணி செய்து கொண்டிருக்கும் போது திடீரென அங்கிருந்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெட்ரோல் நிலையத்தில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் 20 பேருக்கு பலத்த காயம் அடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.