மகாராஷ்டிரா மாநிலத்தில் விமானங்களிலிருக்கும் CABIN CREW போல அரசு பேருந்துகளில் பணிபுரிய மற்றும் பயணிகளை ஈர்ப்பதற்காக அம்மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திள்ளது. அதில் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் பணிப்பெண்களை நியமனம் செய்துள்ளது.
அதில் முதல் கட்டமாக மும்பை மற்றும் புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் ‘ஷிவ்னெரி சுந்தரி’ என்ற பெயரில் பணிப்பெண்களை நியமித்துள்ளனர். இப்பெண்கள் பயணிகள் பேருந்துகளில் ஏறும் போது அவர்களை வரவேற்பதற்கும், பயணிகளுக்கு பேருந்துகளில் ஏறி இறங்க உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.