சமையல் எரிவாயு விலை உயர்வால் நடுத்தர வதுக்கத்தினர் பெரும் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், கையில் காலி சிலிண்டரை வைத்திருக்கும் ஒரு பெண், திடீரென தெய்வ அருள் வந்து ஆடுவது போன்ற பாவனையில் ஆவேசமாகச் செயல்படுகிறார்.
மேலும் சிலிண்டர் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதைக் கண்டு மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான அவர், அந்த ஆதங்கத்தை இப்படி விசித்திரமான முறையில் வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “விலைவாசி உயர்வு மக்களை எந்த அளவுக்குப் பாதித்திருந்தால் இப்படி ஒரு செயலைச் செய்வார்கள்” எனச் சிலர் ஆதங்கப்படுகின்றனர்.
गैस नही मिली तो आ गयी “मैया” #मध्यप्रदेश के मुरैना में एक महिला को LPG नही मिली. महिला नाराज हो गयी और फिर जीभ बाहर निकालकर “मां महाकाली के स्वरूप” में उसने गैस ऐजेंसी के सामने प्रदर्शन किया. महिला को सिलेंडर देकर विदा किया गया.#HimantaOnceAgain pic.twitter.com/Pgkbnv5rYR
— M.H.Ansari❤️🇮🇳 (@hai_mahmoodul) March 15, 2026
“>
இந்நிலையில் அதே சமயம், அவரது முக பாவனைகளும் உடல் மொழியும் ஒரு நொடியில் மாறிய விதம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நகைச்சுவையாகவும் அதே சமயம் சமூகத்தின் வலியைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கும் இந்த வீடியோ, தற்போது மராட்டிய மாநிலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பேசுபொருளாக மாறியுள்ளது.
