
தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தர்மைய்யா, லலிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சந்தீப்குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தனது மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலை பட்டப்படிப்பு முடித்த பிறகு, தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் அவனி எலெனா என்ற பெண்ணும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து தங்களது காதல் விவகாரம் குறித்து இருவரும் பெற்றோர்களுக்கு தெரிவித்தனர். ஆனால் சந்தீப்குமார் வீட்டில் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மல்காஜ் கிரி அடுத்த காட் கேசரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி சந்தீப்குமார் மணமகளின் கழுத்தில் தாலியை கட்டினார்.