கிரிக்கெட்  கேப்டன்களுக்கு அன்பும் வெற்றியும் கைகோர்த்து ஒன்றாக அமைவது போல உலக கோப்பையை வெல்வதற்கு முன்பாக அதற்கு முந்தைய வருடம் திருமணம் ஆன கேப்டன்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம், 2002 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் ரியானா கேன்டரை மணந்தார், அடுத்த ஆண்டான  2003ல்  கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றார்.

இதைத்தொடர்ந்து இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி சாக்ஷியுடன் 2010-ல் திருமணம் செய்து கொண்டார், அதற்கு அடுத்த ஆண்டே, அவர் 2011 உலகக் கோப்பையை கைப்பற்றினார். இங்கிலாந்தின் கேப்டன்  இயோன் மோர்கன், 2018 இல் தாரா ரிட்வேயை மணந்து, 2019 ல் உலகக் கோப்பையை தனது அணிக்கு பெற்று தந்தார். 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பெக்கி பாஸ்டன்-ஐ திருமணம் செய்ய கம்மின்ஸ் தனது அணியை 2023 உலகக் கோப்பையை பல சவால்களுக்கு மத்தியில் கைப்பற்றினார்.