டேட்டிங் இணையதளம் மூலம் சந்தித்த பெண் ஒருவருடன் ஹோட்டல் சந்திப்பிற்கு சென்ற நபர் ஒருவர் பொய்யான கற்பழிப்பு புகாரில் மிரட்டப்பட்ட சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றவாளிகள் : இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் கோர்பாடி காவ்னைச் சேர்ந்த 37 வயதுடையவர், இந்த வழக்கில் இரண்டு முக்கிய குற்றவாளிகள் உள்ளனர். முதலாவது டேட்டிங் இணையதளம் மூலம் அறிமுகமான பெண், 2வது அப்பெண்ணின் ஆண் கூட்டாளி

ஏமாற்றும் சந்திப்பு: கோர்பாடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பெண்ணும் பாதிக்கப்பட்ட நபரும் சந்திக்க (‘டேட்’ ) முடிவு  செய்ய,  அழைப்பு விடுத்த பெண் குறிபிட்ட  அறைக்குள் பாதிக்கப்பட்டவர் நுழையும் போது, ​​அவரை அப்பெண்ணுக்கு பதிலாக ஆண் கூட்டாளி எதிர்கொண்டார்.

கொள்ளை: ஆண் கூட்டாளி பாதிக்கப்பட்டவரை உடல்ரீதியாகத் தாக்கினார், மேலும் பெண்ணும்,  அவளது கூட்டாளியும் அவர்களது வலையில் சிக்கியவரை நடந்தவற்றை வெளியே கூற நினைத்தால் தவறான கற்பழிப்பு புகார் அளித்து வாழ்க்கையை நாசமாக்கிவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

மிரட்டி பணம் பறித்தல்: இந்த தொடர் மிரட்டலின் காரணமாக, பாதிக்கப்பட்ட நபர் பெண்ணுக்கும், அவரது கூட்டாளிக்கும் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ 20,000 பணத்தை GPAY வாயிலாக அவர்களுக்கு அனுப்பியுள்ளார். 

சட்ட நடவடிக்கை: இதையடுத்து பாதிக்கப்பட்டவர் அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட, சந்தன் நகர காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. இதன் விளைவாக, கொள்ளை மற்றும் மிரட்டல்  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அந்தப் பெண் மற்றும் அவரது கூட்டாளி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தொடரும் விசாரணை: மேலும் ஆதாரங்களைத் திரட்டவும், வேறு யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா ?  என்பது உள்ளிட்ட கோணங்களில்  போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.