வடக்கு டெல்லியில், சிம் மாற்றும் முறை மூலம்  நடைபெறும் ஃபோன் ஹேக்கிங் மோசடி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

பாதிக்கப்பட்டவர்:இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் 35 வயதான வழக்கறிஞர், போன் ஹேக்கிங் சம்பவத்தால் அவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிடத்தக்க பணத்தை இழந்துள்ளார்(சரியான தொகை  எவ்வளவு என்பது தெரியவரவில்லை).

ஆரம்ப அழைப்புகள்: வழக்கறிஞருக்கு தெரியாத எண்ணிலிருந்து மூன்று முறை அழைப்பு வந்துள்ளது. அதை அவர் ஏற்கவில்லை. நான்காவது முறை அழைப்பை ஏற்கும் போதுகொரியர் -லிருந்து வந்திருப்பதாக தெரிவித்த நபர் வழக்கறிஞரின்  முகவரி மற்றும் தனிப்பட்ட தகவல்களை கோரியுள்ளார். 

பணம் டெபிட்: அவரது முகவரி மற்றும் தனிப்பட்ட  தகவல்களை பகிர்ந்த பிறகு, வழக்கறிஞருக்கு எதிர்பார்த்தபடி ஒரு பார்சல் கிடைத்துள்ளது. அதையடுத்து,  அவரது  கணக்கில் இருந்து இரண்டு முறை எவ்வித அனுமதியின்றி பணம் எடுக்கப்பட்டு, அது  குறித்த அறிவிப்புகள் அவரது மொபைலுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. 

வழக்கத்திற்கு மாறான செயல்பாடு:  போலீசார் விசாரணையில் அவரது  சாதனத்தில் “அசாதாரண” செயலிகளின் பயன்பாடு கண்டறிப்பட்டு அதன் மூலம் ஃபிஷிங் தொடர்பான எஸ்எம்எஸ் செய்திகள் உள்ளிட்டவை மொபைலுக்கு அனுப்பப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 

சிம் ஸ்வாப்பிங் மோசடி: இந்த சம்பவம் சிம் ஸ்வாப்பிங் மோசடியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இத்தகைய மோசடிகளில், ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டவரின் சிம் கார்டுக்கு அங்கீகரிக்கப்படாத அழைப்புகள் மூலமாகவோ, குறுஞ்செய்தி வாயிலாகவோ  அவர்கள் பல்வேறு வகையான அடையாளத் திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.

சிம் ஸ்வாப்பிங் மோசடிகளைத் தடுப்பது எப்படி :சிம் ஸ்வாப்பிங் மோசடிகளில் இருந்து பாதுகாக்க, தனிநபர்கள் தங்கள் சிம் கார்டில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உடனடியாகத் தங்கள் சிம் டெலிகாம் வழங்குநரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும், கூடுதல் பாதுகாப்புக்காக தனிப்பட்ட தகவல்களை ஆன்லைனில் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் தங்கள் வங்கி கணக்கை அவ்வப்போது கண்காணித்து, பாஸ்வேர்டுகள்  மாற்றம் செய்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.