தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைத்தறி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். மேலும் முத்து டிராக்டர் டிரைவராகவும் இருந்துள்ளார். நேற்று காலை கயத்தாறு அருகே இருக்கும் தனியார் கிரஷரில் எம்சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு முத்து டிராக்டரில் கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இதில் கரிசல்குளம் விலக்கு அருகே சென்ற போது நெல்லைக்கு சென்ற லாரி மீது டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.