
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்ற வீரரான உர்வில் படேல் ரூபாய் 30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டார். ஆனால் இதுவரை இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. உர்வில் படேல் டி20 தொடரில் குறைந்த பந்துகளில் அதிக சதம் எடுக்கும் வீரர்களின் முதல் இடத்தை பிடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் குஜராத்- திரிபுரா அணிக்கு இடையேயான போட்டியில் வெறும் 35 பந்துகளில் 113 ரன்கள் குவித்து அந்த ஆட்டத்தின் கதாநாயகனாக அறிவிக்கப்பட்டவர். மேலும் இவர் ரிஷப் பண்டின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளவர். அதாவது இதுவரை ரிஷப் பண்டு தான் 35 பந்துகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெயரை பெற்றிருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி வெறும் 28 பந்துகளில் சதம் அடித்து உர்வில் படேல் முதலிடத்தை தட்டி தூக்கி உள்ளார் என்பது முக்கியமானதாகும்.