இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல். இவருக்கு தற்போது 34 வயதாகும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான நிலையில் அதன் பிறகு 3 டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடியுள்ளார்.

அதன் பின் அவர் இந்திய அணியில் விளையாடவில்லை. அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2008 ஆம் ஆண்டு கோலி தலைமையிலான U19 உலகக்கோப்பை அணியில் சித்தார்த் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
