கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள் மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். அதன் பிறகு விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவதால் லிப்ட் வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை அரசு ஏற்று 5.20 கோடி ரூபாய் செலவில் லிப்ட் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் 5.20 கோடி செலவில் லிப்ட் வசதி மற்றும் 3.51 கோடி செலவில் மலையடிவாரத்தில் உள்ள தார் சாலையை சீரமைக்கும் பணிகள் போன்றவற்றுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். அதன்பிறகு பூமி பூஜை விழாவில் மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் தர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க் சிறப்பாக பூமி பூஜையை நடத்தினார்கள்.