நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-யிடம் இருந்து பெரிய தகவல் வெளியாகி இருக்கிறது. முன்பாக LIC-க்கு அதிக வரி செலுத்தி வந்த மத்திய அரசு, இம்முறை விதிகளில் பெரிய மாற்றம் செய்து உள்ளது. அந்த வகையில் இனிமேல் LIC பாலிசி எடுத்த பிறகும் மக்கள் வரிசெலுத்த வேண்டியிருக்கும். இதுகுறித்து தகவலளித்த LIC தலைவர், நிறுவனத்தின் மொத்த வருடாந்திர பிரீமியத்தில் பாதி ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வருகிறது. நிதி ஆண்டின் கடைசியில், காப்பீட்டு பாலிசிகளை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

2023ம் வருடம் பட்ஜெட்டில் ரூபாய்.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரீமியத்துடன் பாலிசி முதிர்வுத்தொகைக்கு இனி வரிசெலுத்த வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அத்துடன் அரசாங்கம் நாடு முழுவதும் புது வரிவிதிப்பு முறையை ஊக்குவிக்கிறது. இவற்றில் வரி விலக்கு இல்லை. அதன்படி, வரியைச் சேமிக்க இனி LIC பாலிசி எடுப்பவர்கள், எதிர் காலத்தில் அதை எடுப்பதையும் நிறுத்தலாம். இந்நிலையில் இனி வரக்கூடிய காலங்களில் அரசின் இந்த முடிவின் தாக்கம் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஏற்படும். அதுமட்டுமின்றி அதன் நேரடி விளைவு LIC-ன் வளர்ச்சியில் காணப்படும்.