தமிழக கட்சியில் ஒன்றான நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் சீமான். இவரது கட்சியை குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ், எஸ்.பி அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் செயல்படும் நாம் தமிழர் கட்சி ஒரு கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம் என அவர் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து சீமான் கோயம்புத்தூரில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தோடு 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 36 லட்சம் வாக்குகள் பெற்ற மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக தமிழ்நாட்டில் நிலைத்து உள்ளது. ஆனால் திருச்சி எஸ்.பி வருண்குமார் ஐ.பி.எஸ் எவ்வாறு பிரிவினைவாத கட்சி என குறிப்பிட்டார். எங்களது கட்சியை குறித்து குறை கூற தான் ஐ.பி.எஸ் ஆனாரா? தமிழர்கள் எப்படி தமிழ்நாட்டில் பிரிவினைவாதகாரர்கள் ஆக முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார். மோத வேண்டும் என்றாகிவிட்டது வா மோதி பார்ப்போம் என சீமான், வருண் குமார் ஐ.பி.எஸ் க்கு சவால் விடுத்தார்.