
லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான், லியோ படத்திற்கு நான்கு மணி காட்சி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்தால் சட்டஒழுங்கு ஒன்றும் கெட்டுவிடாது. நடிகர் விஜய் வளர்ந்து வரும் ஒரு நடிகர் என தெரிவித்தார். கேரளாவில் மக்கள் படத்தை கொண்டாடி வருகிறார் என தெரிவித்த மன்சூர் அலிகான், தமிழ்நாட்டில் சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்காதது சற்று வருத்தமாக தான் இருக்கிறது என்றும், lcu என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.