
நான் ரெடி தான் பாடலை கொண்டாடும் விதமாக மீம் ஒன்று இன்ஸடாவில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிடைக்கக்கூடிய சிறிய HINT க்களை கொண்டு அசத்தலான திரைக்கதைகள் எழுதும் பல ஜாம்பவான்கள் இணையதளத்தில் வளம் வரவே, பல விதமான கதை கண்ணோட்டத்தில் லியோ சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக ட்ரெண்டாகி வருகிறது.
அதேபோல இதற்கு முன்பு வந்த விஜய் படங்களை விட இந்தப் படம் அதிக அளவில் வசூல் சாதனை படைக்கும் என்ற அதீத நம்பிக்கையும் ரசிகர்களிடையே எழுந்து வர, ரசிகர்களுக்கு மேலும் புத்துணர்ச்சியளிக்க படத்தின் முதல் பாடலான நான் ரெடி தான் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பாடலுக்கு இசையமைத்த அனிரூத்தை விஜய் ரசிகர்கள் செல்லமாக அணில்-ரூத் என அழைத்து வருகின்றனர். காரணம் இயல்பான அனிருத் பாடல்களை விட விஜய் படங்களில் இடம்பெற்றிருக்கும் அனிரூத் பாடல்கள் தனித்துவம் மிக்கதாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் பாடல் வெளியான நாள் முதல் இன்று வரை சலிப்பை ஏற்படுத்தாத பாடலாகவும், அதிகம் கேட்கப்படும் பாடலாகவும் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் MEME பேஜ் ஒன்றில் நான் ரெடி தான் பாடலை காலை முதல் மாலை வரை பலமுறை ரசிகர்கள் ரிப்பீட் MOOD இல் கேட்டு உற்சாகமான மனநிலையை அடைந்து வருவதை குறிப்பிடும் விதமாக, மருத்துவமனைகளில் வழங்கப்படும் மாத்திரைக்கு கவரை உவமையாக கொண்டு, விரைவில் நலம் பெற வேண்டுகிறோம் எனக் குறிப்பிட்டு, காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளையும் இப்பாடலை ரசிகர்கள் விரும்பி கேட்பதாக பதிவிட்டிருந்தார். அது தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram