சிம்ம ராசி அன்பர்களே… இன்று உங்களுடைய பேச்சில் வசீகரம் அதிகரிக்க கூடும். முகப்பொலிவும் இன்று கூடும். காரியங்களில் வெற்றி ஏற்படும்.  ஊதாசீனப்படுத்தியவர்கள்  நட்பு பாராட்டகைகூடும்.  நல்ல மனசுக்கு சொந்தக்காரர்களாக காணப்படுவீர்கள். வெளி உலக தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் மனதிற்குள் தோன்றும். நீதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகத் தெளிவாக அணுகுவீர்கள். எல்லோரின் மனதிலும் கண்டிப்பாக இடம் பிடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய பணம்,  கண்டிப்பாக வரும். தைரியமான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும்.

பொன், பொருள் சேர்க்கை ஏற்படப்படக்கூடும். தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். இன்று உபரி பண வருமானத்தால் வேண்டியவை வாங்கிக் கொள்ள முடியும். குடும்ப பிரச்சனைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் இருக்கக்கூடும். எந்த ஒரு சூழ்நிலையிலும் சுய கௌரவத்தை நீங்கள் விட்டுக் கொடுக்காமல் செயல்படுவீர்கள்.  மன தைரியம் ஒரு பக்கம் கூடும். மனதில் இருந்த கவலை,  வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிமையாக பணிகளை செய்து முடிக்க முடியும்.  மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரகைகூடும். புதிய ஆர்டர்கள்  பிடிப்பதில்  இருந்த கஷ்டம் குறையும். வெளிநாடு முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய செய்திகள் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். பெண்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்க முடியும். நிதி சம்பந்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். பெண்களுக்கு கனவுகள் நினைவாக கூடும்.

காரியங்கள் ஓரளவு கை கூடும். பெண்கள் இந்த நாளை நிம்மதியான நாளாக மாற்றி  அமைத்துக் கொள்வீர்கள். காதலை பொருத்தவரை பெரிய பிரச்சினை இருக்காது.  சமாளித்து வெற்றி பெற முடியும். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கும் செல்லும் பயப்பட வேண்டாம். இன்று மாணவர்கள் தனிமை விரும்பிகளாக காணப்படுவீர்கள். எதையோ யோசித்துக் கொண்டிருப்பீர்கள். சிந்தனையை ஒரு நிலைப்படுத்துவது நல்லது.  கல்வி மீது முழுமையான அக்கறை கொள்ள வேண்டும். படித்து முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது,  ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு,  எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு வாருங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படப்படக்கூடும்.

சிம்ம ராசிக்கான அதிர்ஷ்டமான திசை: மேற்கு

சிம்ம ராசிக்கான  அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

சிம்ம ராசிக்கான அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச் மற்றும் பச்சை நிறம்