ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பூஜையின் இறுதி நாளில் அனுஷ்டிக்கப்படும் ஆயுத பூஜைக்கே அத்தகைய பெயர் வந்ததற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் மேற்கொண்டு ஒரு வருடம் அஞ்ஞானவாசம் மேற்கொள்ள தொடங்கிய போது தங்கள் ஆயுதங்களை வன்னி மரம் ஒன்றில் மறைத்து வைத்தனர். தங்களது அஞ்ஞான வாசம் முடிந்து மறைத்து வைத்த ஆயுதங்களை பாண்டவர்கள் எடுத்து ஆயுத பூஜை நாளில் அதே வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்துள்ளனர்.

அதேபோன்று ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதமும் மேற்கொண்டுள்ளனர். அதன்படி ஆயுதங்களை வைத்து பாண்டவர்கள் வணங்கியதால் தான் இந்த நாளுக்கு ஆயுத பூஜை என பெயர் வந்ததாக கூறப்படுவதுண்டு.