
லியோ திரைப்படம் LCU இல் இருப்பதை கமல்ஹாசன் நிறுவனம் உறுதி செய்துள்ளதாக தகவலொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகியுள்ள லியோ திரைப்படம் கதைக்களம் என்னவா இருக்கும் என்ற ஆர்வத்தை விட, லியோ எல்சியு-க்குள்ள இருக்குதா? இல்லையா ? அப்படிங்கறது தான் படத்தின் மீது எதிர்பார்ப்புள்ள ரசிகர்களுக்கான மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. படக்குழுவிலிருந்து யார் எங்கு பேசினாலும் LCU க்கான ஹிண்ட் கிடைத்திடாதா ? என மிகுந்த ஆர்வத்துடன் அவர்களது பேச்சை கவனித்து,பின் அதை D Code செய்து இணையத்தில் வைரலாக்கும் நெட்டிசன்களுக்கு லட்டு போல ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி,
கமலஹாசன் அவர்களது நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் NOC என அழைக்கப்படும் non objection certificate ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் படி, ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்த திரைப்படங்களில் உள்ள ஏதேனும் ஒரு காட்சியையோ, பாடல்களையோ, கதாபாத்திரத்தையோ முறையாக 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் படத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தமாகும்.
ராஜ்கமல் பிலிம்ஸ் சமீபத்தில் தயாரித்த படம் விக்ரம். தற்போது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் படம் லியோ. தற்போது இதனடிப்படையில் லியோ திரைப்படம் கண்டிப்பாக LCU வில் இருக்க 100% வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டுட்டு வருகின்றனர்.